Breaking News

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு.. பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விபரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது.


9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும்.

வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும்

பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும்

பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது

பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது

அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி பாட்டில்களை வைத்திருக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் திறக்கக் கூடாது. பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது. 

வெளியாட்கள் பள்ளிக்குள் வருவதை அனுமதிக்கக் கூடாது.

பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். 

அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும்.

பள்ளிப் பேருந்துகள், வேன்கள், விடுதிகளிலும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளைத் திறக்கலாம்" என்று வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், நீண்ட காலத்திற்குப் பின் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருவதால் எடுத்தவுடன் பாடங்களை நடத்தாமல், உளவியல் ரீதியாக மாணவர்களைத் தயார்ப்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback