Breaking News

60 வயதிற்க்கு பிறகு மாதம் 5000 மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 60 வயதிற்க்கு பிறகு மாதம் 5000 மத்திய அரசின்  ஓய்வூதிய திட்டம் முழு விவரம்


அடல் பென்ஷன் திட்டம் 

இந்த திட்டத்தின் நோக்கமே  ஓய்வுக்காலங்களில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம், மாதம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.

இந்த ஓய்வூதியத் திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களை ஓய்வூதியத்திற்காக தானாக முன்வந்து சேமிப்பதை ஊக்குவிக்கிறது.

சிறு வயதிலேயே ஒருவர் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்தால் 60 வயதை எட்டிய பின்னர், இந்த திட்டத்திற்கு ரூ. 1,000, ரூ .2,000, ரூ .3,000, ரூ .4,000 அல்லது ரூ .5,000 நிலையான ஓய்வூதியம் கிடைக்கும் 

மேலும்  இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக ஒரு சிறிய தொகையை வழங்கும்.

தகுதி:-

18 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள்.

ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைத்து பயன்பெறலாம். 

மேலும் இந்த கணக்கை தாங்கள் துவங்கும் பொழுது தங்களுக்குரிய நாமினியை தேர்வு செய்ய வேண்டும்.

கணக்கு தொடங்குவது எப்படி?

உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, தேவையான சான்று இனைத்து விண்ணப்பிக்கலாம்


தேவையான சான்று என்ன

ஆதார் கார்டு

முகவரி சான்று 

மாதம் எவ்வளவு பணம் கட்டவேண்டும்

உதாரணமாக, இந்தத் திட்டத்தின் கீழ்  ஒருவர் இணைந்தால் அவர் தேர்தெடுக்கும் திட்டத்தின் கீழ் மாத மாதம் குறிப்பிட்ட அளவு பணம் கட்டவேண்டும் ஒருவர் இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 39 வயது வரை முதலீடு செய்யலாம், அதே போல் முதலீட்டாளர் 60 வயதை அடைந்த பின்னரே ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.இந்த திட்டத்தில், வைப்புத்தொகையாளர் மரணமடைந்தால், அவரது மனைவி அல்லது மகன்/மகள் ஓய்வூதியத்தை கோரலாம். 

மேலும் விவரங்களுக்கு:

https://www.jansuraksha.gov.in/Files/APY/Tamil/FAQ.pdf

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback