சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து கொடுத்து விட்டோம். 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி காட்டிய அரசு ஸ்டாலின் வீடியோ
திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில்
மக்களாகிய நீங்கள் வாக்கு அளித்த காரணத்தால் தான் நான் முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்து இருக்கிறேன். நீங்கள் வழங்கிய ஒவ்வொரு வாக்கும் நான் இன்று கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு வாக்களித்தால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள், மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்வார்கள் என்று நம்பி ஓட்டு போட்டீர்கள். நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை இம்மி பிசகாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.
505 வாக்குறுதிகளை கொடுத்தோம் அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்து கொடுத்து விட்டோம்.
4 மாசத்துக்குள்ள 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டிய அரசு, இந்திய துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம். எப்பவும் நாங்க இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம்.
மூன்று மாசத்துக்கு ஒரு முறை நானே உங்ககிட்ட வந்து நிறைவேற்றிய வாக்குறுதிகளை இப்படி பட்டியல் போட்டு சொல்வேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்து தானே பார்க்க போறேன் என்று அலட்சியமாக இருக்க மாட்டோம். ஏனெனில் என்னை இயக்குவது மக்களாகிய நீங்களும், எனது மனசாட்சியும் தான். நீங்கள் உத்தரவிடுங்கள், உங்களுக்காகவே உழைக்க காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
வீடியோவை பார்க்க:
https://twitter.com/mkstalin/status/1441578730011316235
சொன்னதைச் செய்திருக்கிறோம்! https://t.co/Sk5PwilIvs
— M.K.Stalin (@mkstalin) September 25, 2021
Tags: தமிழக செய்திகள்