தினமும் 3000 முதல் 10,000 வருமானம் அமேசான், பிளிப்கார்ட்டில் வேலைன்னு வரும் மெசஜ் யாரும் நம்பாதீங்க காவல்துறை எச்சரிக்கை!
தற்போது உங்கள் செல்போன் எண்களுக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என லிங்க் ஒன்றுடன் மெசேஜ் அனுப்புகிறது. அந்த லிங்க் -ஐ அழுத்தினால் ஹனி மற்றும் மேக்கிங் என்னும் ஆப் உடனடியாக டவுன்லோட் ஆகிறது. அதன் பின்னர் அந்த ஆப் மூலம் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமில் பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கலாம் என அறிவுறுத்தபடுகிறது. அதற்கு போனஸ் தொகையாக 101 ரூபாயும் அனுப்பப்படுகிறது.
அதில் வரும் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்ய உங்கள் வங்கிக் கணக்கு விபரங்கள் கேட்கப்படுகிறது.அதை கொடுக்கும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து பண மோசடி நடைபெறுகிறது.
இதை நம்பி பொதுமக்கள் லட்சக்கணக்கான பணத்தை இழந்து இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருவதாகவும் எனவே மக்கள் இந்த நூதன மோசடியில் சிக்க வேண்டாம். என்றும் உங்கள் மொபைலில் நீங்கள் இது போல் மெசஜ் வந்து அந்த ஆப் இன்ஸ்டால் செய்து இருந்தால் உடனடியாக அந்த் ஆப்பை டெலிட் செய்யுங்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்