Breaking News

அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவு

 

மேலும் கிராமசபை கூட்டங்களை திறந்தவெளியில் நடைபெறவேண்டும், அனைவரும்கொரோனா தடுப்பு விதி பின்பற்றவேண்டும்

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் எனவும் தமிழக அரசு கூறியிருக்கிறது. 

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் கிராம சபையில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கிராம சபையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.

கிராமசபை கூட்டம் 02.10.2021 காலை 10 மணிக்கு கூட்டப்பட வேண்டும்.

கிராம சபையின் நேரத்தை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கட்டுப்படுத்தலாம் மற்றும் கால அவகாசத்திற்குள் நிகழ்ச்சி நிரல்களை எடுத்து விவாதிக்க வேண்டும்.


 கிராம சபை கூட்டம்: எதற்காக..! ஏன்..! நடத்தப்படுகிறது..! உங்களின் உரிமை என்ன?..!!

https://www.adminmedia.in/2019/06/blog-post_41.html

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback