Breaking News

சிறுவர்களை அடிமையாக்கும் Free Fire கேம்க்கு தடைகோரி பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி கடிதம்!

அட்மின் மீடியா
0

கடந்த ஆண்டு பப்ஜி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒன்றிய அரசு தடை செய்தது.  இதனால், சிறுவர்கள் பப்ஜி விளையாட்டிற்கு மாற்றாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டை தேர்வு செய்து விளையாடி வருகிறார்கள். மேலும் பப்ஜியும் அங்கிகாரமற்ற முறையில் பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள். 


இதனால் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டால் சிறுவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகியுள்ளனர். மேலும் பல ஆன்லைன் விளையாட்டு செயலிகளும் உள்ளன. தற்போது கொரோனா காலம் என்பதால் 24 மணி நேரமும் ஆன்லைன் விளையாட்டிலேயே இருந்து வருகிறார்கள். எனவே இந்த விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு டெல்லி நீதிபதி நரேஷ் குமார் லாக கடிதம் எழுதியுள்ளார். குழந்தைகளை அடிமைப்படுத்தும் இந்த ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback