FACT CHECK: பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தப்பட்டதா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழ்நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைத்துவிட்டு வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை தமிழ்நாடு அரசு அதிகரித்துவிட்டது என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது என்று தினமலரில் வெளியான செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆனல் தமிழகத்தில் பெட்ரோல் மட்டுமே லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது. ஆனால் டீசலுக்கு குறைக்கப்படவில்லை. இது கூட அறியாமல் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 குறைக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளனர்
ஆனால் அந்த செய்தி தற்போது உள்ள செய்தி இல்லை தினமலர் நாளிதழில் 15.08.2019 அன்று உயர்த்தப்பட்ட அபராத தொகை சென்னையில் அமலுக்கு வந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது
2019 ம் ஆண்டு செய்தியினை தற்போது நடந்தது போல் பலரும் பொய்யாக பரப்பி வருகின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.dinamalar.com/news_detail.asp?id=2357488
https://www.facebook.com/shakkil.ahamed.357/posts/2132187603740264
Tags: FACT CHECK மறுப்பு செய்தி