மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் பதவியேற்பு.!
மலேசிய பிரதமர் முகைதின் யாசின் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு மலேசிய மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார்
கடந்த 2018 ஆம் ஆண்டு மலேசிய நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது மலேசிய பிரதமராக மகதீர் மோகமத் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் தனது பதவியை மகதீர் மோகமத் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து முகைதின் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார்.கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் குழப்பங்கள் காரணமாகவும், கூட்டணி கட்சி எம்பிக்கள் 15 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டதால், மலேசிய மன்னரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் முகைதின் யாசின் வழங்கினார்.
இந்நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்