Breaking News

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் ரத்து

அட்மின் மீடியா
0

ஆன்லைன் ரம்மி, போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன்கேம் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

 


இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விளையாட்டுகளால் பலர் பணத்தை ஏமாந்துள்ளனர். பொதுநலனை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டது. சட்டத்தை இயற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என வாதிட்டார்

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்

தமிழக அரசு கொண்டு வந்த, இந்தச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்ததுடன், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது. 

உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை என  தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback