ஒலிம்பிக்: மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.
இன்று நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கசகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்ட அவர் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலபதக்கத்தை வென்றார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 6வது பதக்கம் ஆகும் மேலும் . மல்யுத்தப் போட்டியில் இது இரண்டாவது பதக்கம் ஆகும்
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியா வாங்கிய பதக்கங்கள் :
பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்
இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்றார்
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்
குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெண்கல பதக்கத்தை வென்றார்
ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது
மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா
Tags: இந்திய செய்திகள்