Breaking News

கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் துவக்கம் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உயர்கல்வித்துறை உத்தரவு..!

அட்மின் மீடியா
0

இன்று முதல் அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், பணியாளர்களும் அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு வர வேண்டும் என்றும் அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆணையிட்டுள்ளார்.



கல்லூரியில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். கல்லூரிகள், பல்கலைகழகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

பெரும்பாலான கல்லுாரிகளில், ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்ட நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback