பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற் கொள்கிறார்.தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடன்கு, வரும் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை மேற்கொள்கிறார். முதலமைச்சர் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்