வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை தமிழக அரசு
அட்மின் மீடியா
0
ஆகஸ்ட் 9 முதல் 23-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட உத்தரவில்
நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்