பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன்? தாய் அதிர்ச்சி வாக்குமூலம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு, பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வடிவழகன் மற்றும் அவரது மனைவி துளசிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள துளசி வீட்டில் அவரை விட்டு விட்டு வந்துள்ளார் கணவர் வடிவழகன்
இந்நிலையில், ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து
குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள அவருடைய தாய் வீட்டில் வைத்து போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
துளசியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்னையால் தான் குழந்தையை தாக்கியதாக துளசி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் சென்னை சென்றுள்ளார்கள்.
Tags: தமிழக செய்திகள்