கோவையில் இரண்டு வாரத்துக்கு கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு முழு விவரம்...
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து தமிழக அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சேர்த்து கோவை மாவட்டத்துக்கான புதிய கட்டுப்பாடுகள்
அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் மட்டும் அனுமதி.சில்லரை விற்பனைக்கு அனுமதி இல்லை,
50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி. மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் வீதிகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்