Breaking News

ஆப்கானிஸ்தானை முழுமையாக கைபற்றிய தலிபான் வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கனி

அட்மின் மீடியா
0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான் வசமானதை அடுத்து அதிபர் அஷ்ரப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறினார். 


ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தை 1991ல் கைப்பற்றிய தலிபான், 2001ல் அமெரிக்க ராணுவத்தால் விரட்டி அடிக்கப்பட்டு ஆப்கனில் அதிபர்  ஆட்சி நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கனில் இருந்து இம்மாத இறுதியில் வெளியேற உள்தையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தலிபான் இறங்கியது. 

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற சண்டையில் 13 மாகாணங்களை தலிபான் கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரே வாரத்தில் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தாலிபான்கள் தலைநகரை சுற்றிவளைத்து அனைத்து பகுதிகளில் நுழைந்தனர். இதனால், அரசு அலுவலகங்களில் இருந்து அலுவலர்கள் வெளியேறினர். அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக அதிபர் மாளிகையில் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

மேலும் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியதுடன் தலைநகர் காபூலை விட்டு வெளியேறி விட்டாதகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக அலி அஹ்மது ஜலாலி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 19-ம் தேதி தாலிபான் ஆட்சிப் பொறுப்பேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback