Breaking News

3 மாதத்தில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பு 3 மாதங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பிரஸ் கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை, பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டும்.தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்,வீட்டு மனை, உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.மாறாக, நேரடியாக சலுகைகள் வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், 4 வாரங்களுக்குள் இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback