தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள்
தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகும் தமிழகத்தில் உள்ள ஏழ்மை குடும்பம் மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டிப்பாக செய்லபடுத்துவார் என்றும் இதனிடையே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்க்கு யாரும் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்