IRCTC ரயில் டிக்கெட்டில் ஒரு மாதத்திற்க்கு 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம் எப்படி முழு விவரம்
முன்னதாக IRCTC பயனர்கள் ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்த நிலையில், தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சியில் ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்வது எப்படி?
முதலில் ஐ.ஆர்.சி.டி.சி வலைதளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள்
அதன்பின்பு அதில் My Profile ஆப்ஷனுக்கு சென்று ஆதார் கே.ஒய்.சி விருப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் கார்டு நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து Send OTP’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும்,
அதனை பதிவு செய்து கொள்ளுங்கள்
ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க ‘Update’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும் அவ்வளவுதான்
குறிப்பு:
ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ஆதார் சரிபார்க்கப்படப் பயணியாக இருக்க வேண்டும்.
ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை கூடுதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
Tags: முக்கிய செய்தி