FACT CHECK செப்டம்பர் 5 ல் நீட் தேர்வா? சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தியின் உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் செப்டம்பர் 5 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒரு செய்திய்னையும் அதனுடன் அறிவிப்பு என ஒரு புகைபடத்தையும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மத்திய அரசு மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வை அமல்படுத்தியுள்ளது.இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 5 ஆம் தேதி நேரடியாக நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை செய்தி வெளியிட்டவது போல் ஒரு செய்தி சமூக வலைதளங்களீல் பரவி வருகின்றது
பலரும் ஷேர் செய்யும் அந்த தகவல் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை
அந்த அறிவிப்பு செய்தியும் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை,
மத்திய அரசோ நீட் தேர்வு முகமையோ அது போல் அறிவிக்கவில்லை
இது குறித்து தமிழக அரசின் செய்திமுகமை செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என வெளியான தகவல்கள் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் நீட் தேர்வு குறித்து எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
இதற்காக முன்னாள் நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் சாதக, பாதகங்களை ஆராய்ந்து இந்த குழுதான் அறிக்கை அளிக்க உள்ளது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
நீட் தேர்வு தேதி தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானவை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. pic.twitter.com/OoNGLTKFaw
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) July 7, 2021
Tags: FACT CHECK மறுப்பு செய்தி