Breaking News

கட்டுக்கடங்கா கலவரம்: தென் ஆப்ரிக்காவில் நடப்பது என்ன முழு விவரம்.... கலவர வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 


இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 9 ம் தேதி துவங்கிய போராட்டம் படிப்படியாக கலவரமாகியது.இன்னும் நின்றபாடில்லை

கலவரத்தில் பல கடைகளில் தொலைக்காட்சி பெட்டி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உள்பட பல வீட்டு தேவைக்கான பொருட்களை  பலரது சொத்துகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் பதற்றம் உருவாகி, பொது அமைதி கெட்டுப்போய்க் கிடக்கிறது. 

தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இந்த வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. வன்முறையை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 200க்கும் மேலாக  உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  

கலவர பகுதிகளில்  தேசிய பாதுகாப்பு படையினர் சுமார் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback