வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
அட்மின் மீடியா
0
தனியுரிமைக் கொள்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வாட்ஸ்அப்
கடந்த மே 15ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.பின்னர் பல்வேறு எதிர்ப்புக்குப் பின்னர், மே 15க்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்கு நீக்கப்படாது, ஆனால் பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என கூறியிருந்தது.
இது குறித்த தொடரபட்ட வழக்கில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் வரை தனது தனிநபர் கொள்கைகளை ஏற்க இந்திய பயனாளர்களை வலியுறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்