தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
அதன்படி, இந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85 சதவீத பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 75 சதவீத கட்டணத்தை செலுத்தலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது
85 சதவீத பள்ளிக் கட்டணத்தை செலுத்தும் மாணவர்கள் முதல் தவணையை தற்போது செலுத்த வேண்டும் என்வும் கடைசி தவணையை 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டுள்ளது
மேலும் தனியார் பள்ளிகள், தங்களது கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டில் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
வருமானம் இல்லாதவர்கள், கல்விக் கட்டணத்தில் சலுகைக் கேட்டு பள்ளிகளை நாடலாம்.என்றும் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்