ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு ஆரம்பம் 499 கொடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
இந்தியாவின் பிரபல கார் வாடகை நிறுவனமான ஓலா தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிசினஸில் இறங்கி உள்ளது
ஈட்டர்கோ என்ற நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது
ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெயரையோ விலையையோ இன்னும் அறிவிக்காத நிலையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஆரம்பம் என்று மட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
ஓலா ஸ்கூட்டரை https://olaelectric.com/ எனும் இணையதளம் மூலமாக நுகர்வோர்கள் முன்பதிவு செய்யலாம்.
திரும்பப் பெறக்கூடிய ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இப்போதே முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த ஸ்கூட்டர் அதிநவீன வசதிகளுடன் இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
இந்த ஸ்கூட்டர் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்
Tags: தொழில்நுட்பம்