மருத்துவபடிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் ஒன்றிய அரசு அறிவிப்பு
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவிகித இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும். அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் ஆண்டுதோறும் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 1500 ஓபிசி மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 2500 ஓபிசி மாணவர்களும் பயன்பெறுவர். அது போன்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் 550 மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பு சேர்க்கையில் 1000 மாணவர்களும் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்க:-
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740268
Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. https://t.co/gv2EygCZ7N
— Narendra Modi (@narendramodi) July 29, 2021
Tags: இந்திய செய்திகள்