மத்தியபிரதேசத்தில் ஒரு பல்பு.. ஒரு ஃபேன்.. மின்கட்டணம் ரூ.2.5 லட்சம்: ஷாக்கான மூதாட்டி
அட்மின் மீடியா
0
மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பாய் பிரஜாபதி. இவர் வீட்டு வேலைகள் செய்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் டேபிள் ஃபேன் மட்டுமே உள்ளது. இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என மின் ஊழியர்கள் கொடுத்த ரசீதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
ஒரு மின்விசிறி மற்றும் ஒரு குண்டு பல்பு பயன்படுத்தியதற்கு இரண்டரை லட்ச ரூபாய் மின் கட்டணம் வந்துள்ள இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் தங்கள் ஆதரவை அந்த மூதாட்டிக்கு தெரிவித்து வருகின்றனர்.
source
Tags: இந்திய செய்திகள்