தமிழகத்தில் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை- தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் ஜுலை 21 ஆம் தேதி தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1442 துல் கஃதா மாதம் 29 ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 11.07.2021 தேதி அன்று மாலை துல்ஹஜ் மாத பிறை திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில் காணப்பட்டது.
ஆகையால் திங்கட்கிழமை ஆங்கிலமாதம் 12.07.2021 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா பக்ரீத் பண்டிகை புதன்கிழமை ஜூலை 21 ஆம் தேதி(புதன்கிழமை) கொண்டாடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்