FACT CHECK விருதுநகர் சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலா என பரவும் வதந்தி உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் விருதுநகர் சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவருகின்றது. என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ விருதுநகர், திருநெல்வேலி, மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் அந்த வதந்தி உலா வருகின்றது
ஆனால் உண்மையில் அந்த வீடியோ குஜராத்தின் உள்ள கிர் சரணாலயம் அருகில் உள்ள pipavav shipyard இல் வலம் வந்த சிங்கங்கல் வீடியோ வாகும்
அந்த பகுதியில் இது போல் சிங்கங்கள் வலம் வருவது தொடர்கதையாகும் நீங்கள் கூகுளில் சென்று pipavav shipyard lion என சர்ச் செய்து பாருங்கள் பல கால கட்ட இடைவெளியில் சிங்கங்கள் வந்த பல செய்திகள் உள்ளன
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சிமெண்ட் பேக்டரி என பரப்பபடும் புகைபடமும் குஜராத்தில் உள்ள pipavav shipyard புகைபடும் ஒன்றே
மேலும் இந்த வீடியோ குறித்து குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய திரு அர்ஜுன் சரவணன் அவர்கள் தன் டிவிட்டர் பக்கத்தில் வதந்தி பரப்பாதீர்கள். கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி. இது குஜராத் மாநில சிமெண்ட் பாக்டரி. நெல்லையில் இருக்கும் ஓரே சிங்கம் "துரைசிங்கம்" மட்டுமே.😃 எனவே நிம்மதியாக இருங்க மக்களே! என பதிவிட்டுள்ளார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
வதந்தி பரப்பாதீர்கள்.
— Arjun Saravanan (@ArjunSaravanan5) June 21, 2021
கடந்த இரு நாட்களாக திருநெல்வேலி சிமெண்ட் பாக்டரி அருகே சிங்கம் உலாவுகிறது என வாட்சப்பில் வதந்தி.
இது குஜராத் மாநில சிமெண்ட் பாக்டரி.
நெல்லையில் இருக்கும் ஓரே சிங்கம் "துரைசிங்கம்" மட்டுமே.😃
எனவே நிம்மதியாக இருங்க மக்களே!#திருநெல்வேலி #சிங்கம் pic.twitter.com/Mkmrlf03yo
Tags: FACT CHECK மறுப்பு செய்தி