Breaking News

FACT CHECK மா.பா.பாண்டியராஜன் இலவச கல்வி அறக்கட்டளை என பரவும் செய்தி உண்மையில்லை. முழு விவரம்..

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மஃபா. பாண்டியராஜன் அறிவிப்பு. இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை. Admission Help line – 9962814432 அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும். தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.  என்று  ஒரு செய்தியினை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் கல்விக்கட்டணம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் யாருக்காவது பயன்படும் என்று நினைத்து ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால்

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது ஆகும் மா.பா. பாண்டியராஜன் அவர்கள் அதுபோல் ஒரு அறிவிப்பை அறிவிக்கவில்லை.

மேலும் பலரும் ஷேர் செய்யும அந்த செய்தி பற்றி மா.பா.பாண்டியராஜன் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில்  அந்த செய்தி பொய்யானது என்றும் கடந்த சில மாதங்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு சில சமூக விரோதிகளால் இத்தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இத்தகவல் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.எனவே, இத்தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர வேண்டாம் என மாஃபா அறக்கட்டளையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு மாஃபா அறக்கட்டளை என செய்தி வெளியிட்டுள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback