BREAKING: யூ-டியூபர் மதன் மனைவி கிருத்திகா அதிரடி கைது..!
யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்ததன் மூலம் பிரபலமானார்.
மேலும் யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் யூ-டியூபர் மதன் விசாரணைக்கு நேரில் ஆஜரகாமல் தலைமறைவாக உள்ளார்.
இதைத்தொடர்ந்து, யூ டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் பெண்களை ஆபாசமாகத் திட்டுதல், தடைச் செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மதன் யூ-டியூப் சேனலின் நிர்வாகியாக மதன் மனைவி கிருத்திகா உள்ளதால் சிபிசிஐடி போலீசாரால் கிருத்திகா கைது செய்யப்பட்டார். யூ-டியூபர் மதன் நடத்தும் சேனலின் நிர்வாகி என்பதால் கிருத்திகாவை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்