Breaking News

சிஏஏவை எதிர்த்து தீர்மானம்.. சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் மற்றும் CAA சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்




மத்திய அரசு கொண்டுவந்துள்ள  3 வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது, மானாமதுரை திமுக எம்எல்ஏ தமிழரசி, மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை சட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்களை எடுத்துவைத்தார். 

அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்

மத்திய  அரசு கொண்டுவந்திருக்கக்கூடிய குடியுரிமை திருத்தச் சட்டமும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய சிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்திலே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், அதனையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துவதற்கான தீர்மானத்தையும் வரவிருக்கக்கூடிய பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்

ஆளுநர் உரை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருவதால் எதிரான தீர்மானம் நிறைவேற்றுவது மரபாக இருக்காது என்றும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback