Breaking News

பி.எப் உடன் ஆதார் கார்டை இனைப்பது எப்படி...முழு விவரம்

அட்மின் மீடியா
0

பி.எப் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக,மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித்துறை தெரிவித்துள்ளது.


இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் http://www.epfindia.gov.in/site_en/index.php என்ற லிங்க் மூலமாக,உடனடியாக பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம்

ஆதாருடன் PF கணக்கை ஆன்லைனில் இணைப்பது எப்படி 


முதலில் EPFO இணையதளத்துக்கு செல்லவும் 


அதில் உங்கள் UAN எண் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து Log in செய்துகொள்ளவும் 

அடுத்து அதில் உள்ள Manage என்பதை கிளிக் செய்து அதில்  KYC ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளவும் 

அடுத்து அதில்  ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையில் இருக்கும் உங்கள் பெயரை பதிவிடவும்  அவ்வளவுதான் 

உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு  PF அக்கவுண்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்


முக்கிய குறிப்பு:

உங்கள் பி எப் கணக்கில் உங்களது பெயர் மற்றும் பிறந்த தேதி, மாதம் ,வருடம் எப்படி இருக்கின்றதோ அதே போல்  உங்கள் ஆதார் கார்டில் இருந்தால் தான் உங்கள் பி.எப் கணக்கில் இணைக்கமுடியும் இல்லைஎன்றால் ரிஜக்ட் ஆகிவிடும்.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback