மின்தடை, மின் புகார்கள் பற்றி இந்த நம்பருக்கு போன் செய்து புகார் அளிக்கலாம்!
அட்மின் மீடியா
0
சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் 24மணி நேரமும் இயங்கக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின்தடை, மின் கம்பங்கள் சேதம் பற்றி புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கும் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் மெசேஜ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் மின் தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்