Breaking News

பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலம் புகார் அளிக்கலாம்

அட்மின் மீடியா
0
பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலம் புகார் அளிக்கலாம்


 
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க பதிவுத்துறையில் , பொதுமக்களிடமிருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு , கட்டுப்பாட்டு அறை இன்று முதல் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 


இக்கட்டுப்பாட்டு அறையில் வாயிலாக புகார்களை பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து தொலைபேசி 

9498452110 
9498452120 
9498452130 

ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 
மேலும் igrregpetitioncell_2021 @ tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம். 

பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback