Breaking News

நாளை முதல் சென்னையில் மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடக்கம்...!யார், எப்போது பயணிக்கலாம்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில்பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 


பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும்,பயணம் செய்யலாம். அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் வழங்கப்படும். 

இதேபோல், 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

ஆண் பயணிகள் 'நான் பீக்' நேரங்களில் மட்டுமே பயணிக்க அனுமதி. அவர்களுக்கு ரிட்டர்ன் டிக்கெட் கிடையாது.  அதாவது புறநகர் ரயிலில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் கடைசி ரயில் இயக்கப்படும் வரையிலும் ஆண் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் புறநகர் ரயில் சேவையை எப்போதும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனியார் அலுவலக ஊழியர்கள் அனுமதி கடிதம் மற்றும் ஐடி கார்டு காண்பித்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

வெளியூர் ரயில்களில் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு புறநகர் ரயில் பயணத்திற்கான டிக்கெட் வழங்கப்படும். 

ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இல்லையென்றால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback