FACT CHECK கடல்கள் தீ மூட்டப்படும்போது- என ஷேர் செய்யபடும் கடலில் பற்றி எரியும் தீ எங்கு நடந்தது, காரனம் என்ன? உண்மைகளுடன்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் *அல்லாஹுத்த'ஆலா திருமறையில் சொன்னதில் இது ஓர் உதாரணம் தான்... கடல்கள் என பண்மையில் சொல்லி இருப்பதால், இன்னும் இருக்கிறது...அல்லாஹுத்த'ஆலா நம் (முஸ்லிம்கள்) எல்லோரையும் காப்பாற்றுவானாக கடல்கள் தீ மூட்டப்படும்போது- (அல்குர்ஆன் : 81:6) என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
நாம் இங்கு புனித குர் ஆன் வசனத்தை பொய் என்று சொல்லவில்லை, மாறாக இது பொய்யாக ஒரு செய்திக்கு குர் ஆன் வசனத்தை இட்டு கட்டும் போது அதனை பார்த்து கடந்து போக முடியாது.
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ நைஜிரியாவில் உள்ள படகேரி என்ற பகுதியில் லாகொஸ் lagos beach Badagry fire கடற்கரையில் நடந்தது ஆகும்
அந்த தீ பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தீ பற்றி உள்ளது எனபது நிருபனமானது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி