1 கோடி உதவி செய்து மரணதண்டையில் இருந்து காப்பாற்றி வேலையும் கொடுத்து உதவிய லூலூ தலைவர் யூசூப்
அட்மின் மீடியா
0
இந்தியாவின் கேரளாவை சேர்ந்த பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2012 ம் ஆண்டில் தனது காரை குழந்தைகள் குழுவில் மோதியதில் சூடான் நாட்டைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கொலை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரக உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது
அதன்பின்பு பெக்ஸ் கிருஷ்ணனின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் விடுதலையைப் பெற கடுமையாக முயற்சித்துள்ளனர். முடியாமல் போகவே பெக்ஸ் கிருஷ்ணன் குடும்பத்தினர் லூலூ தலைவர் யூசுப் அலியை அணுகியிருக்கின்றனர்.
அவர் வழக்கின் விவரங்களைப் பெற்று அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொண்டார். இறுதியில் 2021 ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பமானது கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, அந்த நபரின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ஒரு கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பெக்ஸ் கிருஷ்ணன் விடுதலை ஆனார்
இதனை அடுத்து பெக்ஸ் கிருஷ்ணனின் மனைவி வீணா, மகன் அத்வைத் மற்றும் உறவினர்கள் ரூ.1 கோடி வழங்கி உதவிய லூலூ தலைவர் யூசுப் அலிக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 1.45 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.
விமான நிலையத்தில் அவரை வரவேற்க மனைவி வீணா, மகன் அத்வைத் ஆகியோர் இருந்தனர்.9 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய தந்தையை கண்டதும் அத்வைத் அவரது கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார்.
மேலும் இது குறித்து லூலு அதிகாரிகள்
எங்கள் நிறுவனத்தில் அவருக்கு ஏற்ற வேலை தயாராக உள்ளது, அவர் தனது எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடட்டும்
அவர் எப்போது வேலை செய்ய வேண்டும் என நினைக்கும் போது, எங்கள் நிறுவனங்கள் ஒன்றில் அவருக்கு வேலை தயாராக இருக்கும். அவரது விருப்பப்படி எங்கள் நிறுவனம் இருக்கும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்” என தெரிவித்துள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்