FACT CHECK ஹோமியோபதி மருந்து ஆஸ்பிடோஸ்பெர்மா ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் என பரவும் செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஆக்சிஜன் அளவு குறையும் போது, ஆக்சிஜனை பெற காத்திருக்க வேண்டியது இல்லை. ஆஸ்பிடோஸ்பெர்மா கியூ 20 துளிகளை ஒரு கப் தண்ணீரில் கலந்து எடுத்துக் கொள்ளவும். உடனடியாக ஆக்சிஜன் அளவு உயர்ந்து சரியாகி விடும். இது ஒரு ஹோமியோபதி மருந்து. ஆக்சிஜனை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம். என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இந்த தகவல் பொய்யானது என இந்திய அரசு பேக்ட் செக் மறுப்பு வெளியிட்டுள்ளது
மேலும் ஆஸ்பிடோஸ்பெர்மா ஹோமியோ மருந்தானது இந்த ஹோமியோ மருந்தானது ஆரம்பநிலையில் உள்ள மூச்சு திணறலுக்குக்கு ஆஸ்துமா நோயாளிகளுக்கு தரக்கூடியது அதுவும் மருத்துவர் ஆலோசனையில் தான் நீங்கள் மருந்து எடுத்து கொள்ள வேண்டும்.
எந்த மருந்தனாலும் சமூகவலைதளங்களில் வலம் வரும் மருத்துவத்தை நம்பி சுய மருத்துவம் எடுக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனையில் தக்க மருந்தை எடுத்து கொள்ளுங்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி