Breaking News

ஜமா அத்துல் உலமா சபையின் முக்கிய அறிவிப்பு

அட்மின் மீடியா
0
லைலத்துல் கத்ர்

கண்ணியமிகு ஆலிம்கள், ஜமாஅத்துகளின் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

புனிதமிகு ரமளான் மாதத்தின் புண்ணியமிகு காலங்களான லைலத்துல் கத்ர் உடைய இரவு போன்றவற்றில் பள்ளிவாசல்களில் பொதுமக்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள அரசிடம் அனுமதி கேட்கலாமே என்ற யோசனையை சிலர் முன்வைக்கின்றனர். 

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களிடம் நாம் ஆலோசனை செய்ததிலும், களச்சூழலை ஆய்வு செய்ததிலும் தமிழகத்தின் தற்போதைய நிலை மிகவும் நெருக்கடியானதாக இருக்கிறது என்பதும் இந்த நிலை இன்னும் கூட நெருக்கடியானதாக மாற வாய்ப்புள்ளது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. 

அல்லாஹ் பாதுகாப்பானாக ஆகவே தற்போதைக்கு அரசிடம் விலக்கு எதையும் கேட்டு கோரிக்கை வைப்பது பொருத்தமானதல்ல

எனவே ஜும்ஆ, லைலத்துல் கத்ருஈதுல் பித்ரு பெருநாள் தொழுகைகளை இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தந்தாலும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருந்தி மனஅமைதி கொள்வோமாக!

 பள்ளிவாசல்களுக்கு செல்ல முடியாது தடுக்கப்பட்டிருக்கிற நிலையில் ரமளானின் கடை நாட்கள் மற்றும் லைலத்துல் கத்ருடைய நன்மைகளை நமது வீடுகளிலிருந்தும் கூட நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அளவில் நமது மார்க்கம் நமக்கு வழங்கியுள்ள நெருக்கடிகால வாய்ப்புக்களையும் சலுகைகளையும் எண்ணி திருப்தியடைவோமாக

 எனவே கண்ணியமிகு முஃமின்கள்

அல்லாஹ் நமது ஆர்வத்தையும் அக்கறையையுமே கவனிக்கிறான் என்பதை மனதில் வைத்து ரமளானின் புண்ணிய நேரங்களில் வீடுகளிலேயே வணக்கங்களில் உற்சாகத்தோடு ஈடுபடுமாறும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி சூழல் அகலவும். இதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறவும்  
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் 11 தடவை யூனுஸ் கலிமாவை (லாஇலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக இன்னீ குன்த்து மினழ் -ழாலிமீன் ஒதி வருமாறும்

கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமான அனைத்து எச்சரிக்கைகளையும் தவறாது கடைபிடித்து பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு

Dr.V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback