சமுக வலைதளங்களில் பரவியவீடியோ பெண் பக்தரை அடித்த சாமியாரை கைது செய்தது காவல்துறை.
சமுக வலைதளங்களில் பரவிய காணொளி.பெண் பக்தரை அடித்த சாமியாரை கைது செய்தது காவல்துறை.
நாமக்கல் மாவட்டம், மஞ்சநாயக்கனூர் என்ற இடத்தில் மலை கரட்டில் கருப்பணார் சுவாமி கோயில் அமைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் 50 வயதான அனில்குமார் என்பவர் கருப்பணார் சுவாமி கோயிலை புதுப்பித்து தனியாக மடம் போல் அமைத்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்ததார்
இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்வது, பில்லி, சூனியம் போன்றவற்றை எடுப்பது, பேய் விரட்டுவது போன்றவற்றை சாமியார் அனில்குமார் மேற்கொள்ள ஆரம்பித்தார்.
இவர் பேய் ஓட்டும் அந்த வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது
அதில் சாமியார் மதுபோதையில் பெண்களை சாட்டையால் அடிப்பதும், தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைவதும், கால்களால் எட்டி உதைப்பதும் பதிவாகிருந்தது.
அந்த போலி சாமியார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் காதப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர், வேலகவுண்டம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் போலி சாமியார் அனில்குமார் மீது பெண்களை வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்