Breaking News

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு.. தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு !!

அட்மின் மீடியா
0

 புதுச்சேரியில் 144 தடை உத்தரவு.. தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு !!


தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது 

அதற்கான பிரச்சாரங்கள் நாளை இரவு 7 மணியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் சட்டமன்ற  தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நாளை இரவு 7 மணி முதல் வரும் 7-ம் தேதி காலை 7 மணிவரை 

இரு சக்கர வாகன பேரணிகள் 

கூட்டமாக கூடுதல், 

பொதுக்கூட்டங்கள் நடத்துவது, 

ஒலிப்பெருக்கியினை பயன்படுத்துவது 

ஆகியவை முற்றிலும் தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் இந்த தடை உத்தரவு தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் வழக்கமான திருமண நிகழ்ச்சிகள், மதசடங்குகள் போன்றவற்றிக்கு தடை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback