Breaking News

#BREAKING: வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடு: அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

அட்மின் மீடியா
0

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 


 

இந்நிலையில், வழிக்காட்டு தளங்களில் நேரம் குறைப்பது தொடர்பாகவும், வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி அனைத்து மதத்தலைவர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் இந்து மதத் தலைவர்கள், இஸ்லாமிய மார்க்க தலைவர்கள், கிறித்தவ மதத் தலைவர்களுடன், சுகாதாரத் துறைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், காவல்துறை தலைவர் திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 

மதம் சார்ந்த திருவிழாக்கள் கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை பெற்று வருகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback