சீதாராம்யெச்சூரியின் மூத்தமகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
அட்மின் மீடியா
0
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியின் மூத்தமகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னுடன் துணை நின்ற அனைவருக்கும், தனது மகனுக்கு சிசிக்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ முன்களப்பணியார்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சீதாராம்யெச்சூரியின் மூத்தமகன் ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றிவந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்