Breaking News

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்

அட்மின் மீடியா
0

 மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்




மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாள்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். ஆகையால் மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்க வேண்டும்.

மேலும், அத்தகைய நாள்களில் பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback