Breaking News

ரமலான் மாதத்தில் மசூதிகளில் பிரார்த்தனை செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த துபாய்..!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில தினங்களில் புனித ரமலான் நோன்பு தொடங்கவிருப்பதை முன்னிட்டு துபாயில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை செய்யும் வழிபாட்டாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டாய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு  வெளியிட்டுள்ளது. 


புதிய கட்டுபாடுகள்

இரவு நேர தொழுகைக்கான (இஷா) அழைப்பு விடுக்கப்பட்டவுடன் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இஷா தொழுகை நடத்தப்படும்

இஷா தொழுகை முடிந்தவுடன் தராவீஹ்  சிறப்பு தொழுகை நடைபெறும் தராவிஹ் தொழுகை முடிந்தது மசூதிகள் மூடப்படும் 

பள்ளியில் அனைவரும் முக கவசம் அணிவது , சமூக இடைவெளியை கடைபிடிப்பது  உள்ளிட்ட முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் 

இஷா மற்றும் தாராவீஹ் தொழுகைகள்  30 நிமிடங்களில் முடிக்கப்படவேண்டும்

ரமலானின் கடைசி 10 நாட்களில் நிகழ்த்தப்படும் கியாம்-உல்-லைல் எனும் நள்ளிரவு தொழுகை நடத்தப்படுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை



Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this