Breaking News

மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் மரணமடைந்தார்

அட்மின் மீடியா
0

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்  வயது 59 இன்று அதிகாலை காலமானார் 




நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலை அவரது  வீட்டில் இருந்தபோது அவருக்கு  நெஞ்சு வலி ஏற்பட்டது. அடுத்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயற்ச்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரின் உயிர் பிரிந்தது.  

  • 1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார்.


  • 2009-ம் ஆண்டு பத்ப ஸ்ரீ விருதைப் பெற்றவர். 


  • முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர், மாணவர்களைத் திரட்டி  இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு சமூகப் பணியாற்றி வந்தவர்

  • திரைப்படங்களில் நகைச்சுவை மூலம்  சமூக அக்கறை உள்ள கருத்துகளை  மக்களிடையே விவேக் கொண்டு சென்றார். 

  • அவரது சமூக சீர்திருத்தக் கருத்துகளால் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback