FACT CHECK: கற்பூரம், ஓமம் ஆகியவற்றை முகர்ந்தால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்குமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கற்பூரம், லவங்கம், ஓமம், நீலகிரி தைலம் ஆகியவற்றை மூட்டை கட்டி நுகர்ந்து கொண்டே இருந்தால் நுரையீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியிக்கு அறிவியல் பூர்வமாக எந்த வித ஆதாரமும் இல்லை
பொதுவாக மேற்கண்ட முறையில் நீங்கள் செய்தால் உங்கள் நாசி அடைப்புகளை நீக்கம் செய்யும் சுவாசம் கொஞ்சம் சீராகும் அவ்வளவுதான்
ஆனால் அந்த முறையில் உங்கள் இரத்ததில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்காது என்பது தான் உண்மை
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி