Breaking News

தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது..மீறினால் சிறை.... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது..மீறினால் சிறை.... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு


                                  

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை மறுநாள்(ஏப்.6) நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. 

இன்று இரவு 7 மணிக்கு மேல் வீடுவீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு தொடர்பு இல்லாத நபர்கள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடட்டுள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ல 234 தொகுதிகளில்  திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் 

இன்று மாலை 7 மணிக்கு பரப்புரை முடிந்த பின் தேர்தல் தொடர்பான எந்த பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது.

தொலைக்காட்சி, எஃப்.எம்., வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் குறுந்செய்தி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனம் மூலம் பரப்புரையை வெளியிடக்கூடாது. 

பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் பரப்புரை செய்யக்கூடாது.

இந்த விதிமுறைகளை மீறினால், சட்டப்பிரிவு 126, 2ன் படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 

வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் நாளை மாலை 7மணிக்கு பிறகு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

வேட்பாளர் வேறு தொகுதி வாக்காளராக இருந்தால், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. 

திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள் ஆகிய இடங்கள் வெளி ஆட்கள் இருக்கிறார்களா என கண்டறியப்படும். 

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகனம் அனுமதிகள் நாளை மாலை 7 மணி முதல் செயல்பக்கூடாது. 

இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் ஆணைய அறிவிப்பை படிக்க 

 

 https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr030421_t_207.pdf

 

 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback