கொரோனா கால சிறப்பு நிவாரணம் :நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண உதவி தமிழக அரசு அரசாணை
அட்மின் மீடியா
0
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண உதவி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரானாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பாக கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதை நம்பிய பல கலைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்