மதம் மாற்ற தடை கோரி வழக்கு: 18 வயது ஆன ஒருவர் அவர் விரும்பிய மதத்தை அவர் தேர்வு செய்யலாம்- உச்சநீதிமன்றம்
மதம் மாற்ற தடை கோரி வழக்கு: 18 வய்து ஆன ஒருவர் அவர் விரும்பிய மதத்தை அவர் தேர்வு செய்யலாம்- உச்சநீதிமன்றம்
பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது மதச்சார்பின்மை. ஆனால், பொருள் மற்றும் பணம் கொடுத்து மதம் மாற்றுவது, மிரட்டி மதம் மாற்றுவது போன்ற செயல்கள் இந்தியாவில் அரங்கேறி கொண்டிருக்கிறது. இது அரசியல் சட்டத்தின், 14, 21, 25 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. இதுபோன்று மதமாற்றத்தை கட்டாயப்படுத்துவோருக்கும், சூனியம் போன்ற மத நம்பிக்கையை ஏற்படுத்துவோருக்கும் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க சட்டம் இயற்ற வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் அமர்வு மறுத்துவிட்டது. 18 வயது நிரம்பிய ஒருவர் தான் எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற உரிமை இருக்கிறது. அதில் நீங்களோ நீதிமன்றமோ தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த மனுவால் கோபமடைந்த நீதிபதிகள் அமர்வு, பொழுதுபோக்குக்காக இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்தால் வருங்காலத்தில் கடும் அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரர் அஸ்வினி உபாத்யாயாயேவை எச்சரித்தனர் மேலும் சூனியம் குறித்தெல்லாம் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
Source:
Tags: இந்திய செய்திகள்